நவம்பர் 6ஆம் நாள், பெய்ஜிங்கின் மாவட்டம் மற்றும் கிராமப்புறம் என்ற இரு நிலைகளின் மக்கள் பேரவைப் பிரதிநிதிகளின் பதவிக்கால மாற்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் பொதுச் செயலாளருமான ஷிச்சின்பிங், சிசேங் மாவட்ட உள்ளூர் மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் தேர்தலில் வாக்களிக்கும் போது கூறுகையில், இத்தேர்தலின் முழு போக்கிலும் ஜனநாயக முறையில் நடத்தப்பட்டு, மக்களால் மனநிறைவுக்கு ஏற்ப செயல்படும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
6ஆம் நாளன்று, பெய்ஜிங் மாநகரில் 13054 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. பதவியின் எண்ணிக்கையை காட்டிலும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதென்ற முறையின் மூலம் 4898 மக்கள் பேரவைப் பிரதிநிதிகளும், 11137 கிராமப்புற மக்கள் பேரவைப் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
