முதல் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ வசந்த விழா சீனப் பொருளாதாரத்துக்கான உயர்வு

Estimated read time 1 min read

 

 

வசந்த விழா, உலகின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் சேர்க்கப்பட்ட பிந்தைய முதலாவது வசந்த விழா இவ்வாண்டின் வசந்த விழா ஆகும். சீனாவில் பயணம் மேற்கொண்ட சீன மக்களின் எண்ணிக்கை 50.1 கோடியை எட்டியுள்ளது. மொத்த பயண செலவு 67700.2 கோடி யுவானாகும். 1 கோடியே 43 இலட்சத்து 66 ஆயிரம் சீன மற்றும் வெளிநாட்டு மக்கள் சீனாவில் நுழைவதற்கும் சீனாவிலிருந்து வெளியேறுவதற்கும் சீன எல்லை பரிசோதனை வாரியங்கள் உத்தரவாதம் அளித்துள்ளன. 2025ஆம் ஆண்டில் சீனத்  திரைப்பட வசூல், வட அமெரிக்காவைத் தாண்டி உலகின் முதலாவது இடத்தில் உள்ளது.

வசந்த விழாவின் போது பொருளாதாரம் வளர்ந்து, உலகை செழுமையடையச் செய்கிறது.

புள்ளிவிவரங்களின் படி, வசந்த விழா நாட்களில் சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை, புதிய சாதனையைப் படைத்துள்ளது.

அதே வேளையில், சீனப் பயணிகள் உலகின் 2100க்கும் மேற்பட்ட நகரங்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். வசந்த விழாவின் வலுவான சுற்றுலா நுகர்வு, 2025ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது. சீன சந்தையின் செழிப்பு இந்த ஆண்டு உலகளாவிய சுற்றுலா துறை ஏற்றத்தின் தொடக்கச் சின்னமாக மாறும் என்று அமெரிக்காவின் “பயண மற்றும் உலக சுற்றுப் பயணம்” எனும் வலைத்தளம் கருத்து தெரிவித்துள்ளது.

அண்மையில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் உயர்த்தியுள்ளது. பல நாட்களில் பிரான்ஸ் சனோஃபி, ஜெர்மன் வோக்ஸ்வாகன் முதலிய வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் முதலீட்டை அதிகரித்துள்ளன.

சீர்திருத்தங்களை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவதன் மூலமும், உயர் நிலையான வெளிநாட்டுத் திறப்பை விரிவுபடுத்துவதன் மூலமும், சீனா பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியை முன்னேற்றி, உலகிற்கு பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author