2025ஆம்ஆண்டு அக்டோபர் முதல் நாள் தொடங்கி 8ஆம் நாள் வரை, சீன முழுவதிலுமி மேற்கொள்ளப்பட்ட
பயணங்களின் எண்ணிக்கை 243கோடியே 20லட்சத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு
சராசரியாக 30கோடியே 40லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டில் 7 நாட்கள் சீனத்
தேசிய தின விடுமுறையை விட, இது 6.2விழுக்காடு அதிகரித்துள்ளதாக சீனப் போக்குவரத்து
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இக்காலத்தில்
ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 15கோடியே 39லட்சத்து 60ஆயிரத்தை
எட்டியுள்ளது.
நெடுஞ்சாலை
மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 224கோடியே 75லட்சத்து 10ஆயிரத்தைத்
தாண்டியுள்ளது.
நீர்
வழிப் போக்குவரத்து மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 1கோடியே
16லட்சத்து 70ஆயிரமாகும். பயணியர் விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின்
எண்ணிக்கை 1கோடியே 91லட்சத்து 70ஆயிரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.