பாகிஸ்தான் பயணியர் விமான போக்குவரத்து பணியகம் 20ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் ஆதரவுடன் புதிய கவாடார் பன்னாட்டு விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளது.
அந்நாட்டின் தலைமையமைச்சர் முகமது ஷாபாஸ் ஷெரீப் இதற்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். அவர் அறிக்கையில் கூறும் போது, பாகிஸ்தானின் மக்களின் சார்பில், சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.
புதிய பன்னாட்டு விமான நிலையம், பாகிஸ்தான்-சீன நட்புறவுக்கான சின்னமாகும். இந்நிலையம் பாகிஸ்தானின் உள்நாட்டுக்கும் முழு பிரதேசத்துக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.