சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம் 22ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் சீனாவின் உள்நாட்டில் பயணித்த மக்களின் எண்ணிக்கை 561 கோடியே 50 இலட்சமாகும். இது, 2023ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் 14.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டில், உள்நாட்டில் பயணம் மேற்கொண்டவர்களின் மொத்த சுற்றுலா செலவு 5 இலட்சத்து 75 ஆயிரம் கோடி யுவானாகும். இதில், நகரவாசிகளின் சுற்றுலா செலவு 4 இலட்சத்து 93 ஆயிரம் கோடி யுவானாகும்.
இது, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 18 விழுக்காடு அதிகரித்துள்ளது. கிராமவாசிகளின் சுற்றுலா செலவு 83 ஆயிரம் கோடி யுவானாகும். இது, 2023ஆம் ஆண்டை விட 12.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.