கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை சீனா–ஐரோப்பா விரைவு ரயில்
பாதை வழியாக 200,000க்கும் மேற்பட்ட இருபது அடி அளவுள்ள யூனிட்கள் (TEUs) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 17.9 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
நாட்டில் உள்ள 14 சீனா–ஐரோப்பா சரக்கு ரயில் மையங்களில் ஒன்றான
ஜெஜியாங் தற்போது 26 நிலையான வழித்தடங்களை இயக்குகிறது. இவை 50-க்கும் மேற்பட்ட நாடுகளையும் 160 நகரங்களையும் இணைக்கிறன. யாங்சே நதி டெல்டாவில்
இந்த மாகாணம் முன்னணியில் உள்ளது. மேலும் வெளிச்செல்லும்
ஏற்றுமதி அளவில் நாடு தழுவிய அளவில் முதல் மூன்று இடங்களில் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.