ஜி-20 கூட்டத்தில் அமெரிக்க நிதி அமைச்சரின் கூற்றுக்கு சீனா எதிர்ப்பு

சீனாவுடன் தொடர்புடைய அமெரிக்க நிதி அமைச்சர் பெசென்டரின் கூற்றுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவாங்லீங் 3ஆம் நாள் பதிலளித்தபோது, ஜி-20 உள்ளிட்ட பலதரப்பு அமைப்புமுறைகளைப் பயன்படுத்தி, “பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்”, “அதிகப்படியான உற்பத்தித் திறன்”என்பதை தீய நோக்கத்துடன் பரப்புரை செய்வதன் என்பது, அதன் உண்மையான நோக்கம், பாதுகாப்புவாதத்தை ஊக்குவிப்பதும், சீனா மீது அழுத்தம் மற்றும் தடைகளை விதிக்க சாக்குப்போக்குகளை உருவாக்குவதும் ஆகும் என்றும், இதனை சீனா உறுதியாக எதிர்ப்பு தெரிவிக்கின்றது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அமெரிக்காவின் செயல், உலகப் பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் ஒழுங்கைச் சீர்குலைத்து, உலகப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு நாடுகள் பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, கொள்கைகளுக்கான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, திறப்பு மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்கி, நிலையான மற்றும் தடையில்லாத உலகப் பொருளாதார விநியோக சங்கிலியை கூட்டாக பேணிகாத்து, பரஸ்பர நலன் தரும் கூட்டு வெற்றியைப் பெற வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author