சீனா மற்றும் சமோவா தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் சமோவா நாட்டின் தலைவர் துய்மலேஅலி இஃபானோவும் 6ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், சீன-சமோவா உறவின் வளர்ச்சிக்குத் தாம் பெரும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் துய்மலேஅலி இஃபானோவுடன் இணைந்து கூட்டாகப் பாடுபட்டு இரு நாட்டின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவின் புதிய அத்தியாயத்தைப் படைக்க விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
இரு நாடுகள் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட கடந்த 50ஆண்டுகளில் இரு நாட்டின் நட்பு ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக விரிவடைந்து வருகின்றன. சமோவா-சீன உறவு புதிய நிலையில் காலடியெடுத்து வைக்குமெனத் தான் நம்புவதாக துய்மலேஅலி இஃபானோ கூறினார்.
