சீனத் தேசிய மனித உரிமை செயற்பாட்டு திட்டம்(2026-2030) 11ஆம் நாள் நடைபெற்ற 2026·உலக மனித உரிமை மேலாண்மை உயர் மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் வெளியிடப்பட்டது.
இந்தத் திட்ட அறிக்கையில் முன்னுரை, பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாட்டு உரிமை பாதுகாப்பைப் பன்முகங்களிலும் முன்னேற்றுவித்தல், குடிமக்களின் உரிமை மற்றும் அரசியல் உரிமையின் பாதுகாப்பு அமைப்புமுறையை முழுமைப்படுத்தல், சுற்றுச்சூழல் உரிமை பாதுகாப்பை வலுபடுத்துதல், சிறப்பான்மை தேசிய இனங்கள், மகளிர்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் உரிமையையும் நலன்களையும் பாதுகாத்தல், புதிய மனித உரிமைத் துறைகளின் சீரான வளர்ச்சியை ஊக்குவித்தல், மனித உரிமை உணர்வைத் தொடர்ந்து உயர்த்தல், உலக மனித உரிமை மேலாண்மையை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்தல், திட்டத்தின் நடைமுறையாக்கமும் கடமையை நிறைவேற்றமும் ஆகிய 8 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன.
