இன்று நடக்கவிருந்த மின் ஊழியர்களின் போராட்டம் திடீர் ஒத்திவைப்பு!

Estimated read time 0 min read

தமிழக மின் வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை, 6:00 மணி முதல், நாளை காலை, 6:00 மணி வரை, வேலை நிறுத்தப் போராட்டத்தை, 11 தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அந்த சங்கங்களின் நிர்வாகிகள் உடன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், இம்மாதம், 5ம் தேதி பேச்சு நடத்தினர்.

இதில், எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்று காலை மீண்டும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். இதைதொடர்ந்து, சங்க நிர்வாகிகளுடன், மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மாலை பேச்சு நடத்தினார்.

இது குறித்து, மின் வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ரமணியன் கூறியதாவது: அரசு பணியாளர்களுக்கு பணிக்கொடை, 20 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியதை போல், மின் வாரிய பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக, மின் வாரிய தலைவர் உறுதி அளித்தார்.

‘குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே’ என்ற அடிப்படையில், பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். துாத்துக்குடி அனல் மின் நிலையம் மூடப்படாமல் தொடர்ந்து செயல்படும் என, தெரிவித்தார். ஆறு கோரிக்கைகளில் ஒன்றை தவிர, மற்ற ஐந்தையும் நிறைவேற்றுவதாக, வாரிய தலைவர் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author