தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவியில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராகப் பணியாற்றிய தவெக எம்எல்ஏ கருப்பையா, சட்டப்பேரவைச் செயலாளர் சாந்தியைச் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர், பொதுமக்களுள் ஒருவரைத் தாக்கி மிரட்டியதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில் கருப்பையா, சட்டப்பேரவைச் செயலாளர் சாந்தியைச் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. துணை சபாநாயகர் ரவிசங்கருக்குப் பதிலாக கருப்பையாவை நியமிக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றதா என்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது.
இருப்பினும், பதவி மாற்றம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று நடைபெற உள்ள தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
