காலநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் கட்டமைப்பு உடன்படிக்கைக்கான செயலகத்தின் தணிப்பு விவகார மேற்பார்வையாளர் ஸ்டெலியோஸ் பெஸ் மாயோக்லு நவம்பர் 9ஆம் நாள், துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்ற கோப்-31 மாநாட்டில் கூறுகையில், காலநிலை மாற்றத்துக்கான சமாளிப்புத் துறையில் சீனாவின் குவாங் டொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசம் மேற்கொண்ட நடைமுறையாக்கம், குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்று, பசுமையான வளர்ச்சி முறை மாற்றத்துக்கான பாதையை உருவாக்கியுள்ளது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், சீனாவின் குவாங் டொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசம், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற பணிகளை முன்னேற்றி, காலநிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் நகரங்களின் கட்டுமானத்தைச் செயல்படுத்தி வருவதோடு, பிரதேசங்கள் கடந்த ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பெரிய விரிகுடா பிரதேசத்தின் புத்தாக்க மேம்பாடுகளை, பரவல் செய்யப்படக்கூடிய காலநிலை நடவடிக்கைகளாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
