பிரேசிலின் அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட லுலாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 27ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வாழ்த்து தெய்தியில் ஷி ச்சின்பிங் தெரிவிக்கையில், சீன-பிரேசில் உறவின் வளர்ச்சியை முன்னேற்றுவதில் அரசுத் தலைவர் லுலா முக்கிய பங்காற்றியுள்ளார் என்றார். மேலும், சீன-பிரேசில் உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அரசுத் தலைவர் லுலாவுடன் இணைந்து சீன-பிரேசில் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் புதிய அத்தியாயத்தில் காலடியெடுத்துவதற்கு வழிக்காட்டி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புகளுக்கு மேலும் விரிவான வாய்ப்புகளை வழங்கி, இரு நாட்டு மக்களின் நலன்களைத் தொடர்ந்து அதிகரிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநாள், பிரேசில் துணை அரசுத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அல்க்மினுக்கு சீனத் துணை அரசுத் தலைவர் ஹான்ட்செங் வாழ்த்து தெரிவித்தார்.
