சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கட்சி வரலாறு மற்றும் ஆவண ஆய்வகத்தால் தொகுக்கப்பட்ட வறுமை குறைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்துக்கள் என்னும் புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது.
வறுமை குறைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து ஷி ச்சின்பிங் வெளியிட்ட முக்கிய கருத்துக்கள், சீன நாட்டின் நிலைமைக்குப் பொருந்தியுள்ளன. இது, சீனாவின் வறுமை ஒழிப்புப் பணியின் முக்கிய கட்டத்தில் உருவாக்கப்பட்ட சிந்தனையிலுள்ள சாதனையாகும். மேலும், வறுமை ஒழிப்புச் சாதனைகளை வலுப்படுத்தி, கிராம வளர்ச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கும் இப்புத்தகம் வழிகாட்டும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
