பெண்களை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய ஜப்பானிய இராணுவத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட “5”எனும் ஆவணப்படம் அண்மையில் சீனா, தென்கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளில் ஒளிப்பரப்பப்பட்டு, பரந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளால் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம், தென்கொரியாவில் ஜப்பானிய இராணுவப்படையினால் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்ட பெண்கள் என்ற திட்டத்தின் கீழ் உயிர் பிழைத்த கடைசி ஐந்து பாதிக்கப்பட்டவர்களை மையமாக கொண்டுள்ளது. மீட்பு காணொளி காட்சிகள் மூலம் விலைமதிப்பற்ற வரலாற்றுச் சான்றுகளை இந்த ஆவணப்படம் பாதுகாத்துள்ளது. ஜப்பானிய இராணுவவாதத்தின் குற்றங்கள், உண்மையான படங்கள் மற்றும் மறுக்க முடியாத வரலாற்று உண்மைகள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. வரலாற்றை நினைவுகூரவும், அமைதியைப் போற்றவும், ஜப்பானிய இராணுவவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு எதிராக விழிப்புடன் இருக்கவும் சர்வதேச சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கையாக இது அமைகிறது.
