மனிதர்களையே ஏஐ அடக்கி ஆளப்போகிறதா…? ஓபன்ஏஐ நிர்வாகக் குழு உறுப்பினர் விடுத்த பகீர் எச்சரிக்கை…!! 

Estimated read time 0 min read

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் எதிர்காலம் குறித்து கவலைகளும் அதிகரித்து வருகின்றன. பல்வேறு துறைகளில் மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் ஏஐ, ஒருகட்டத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடும் என்ற எச்சரிக்கையை ஓபன்ஏஐ நிர்வாகக் குழு உறுப்பினர் பால் கிறிஸ்டியானோ வெளியிட்டுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற ‘தி ஹிண்டன் லெக்சர்ஸ் 2026’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஏஐ மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள்ளேயே இதுதொடர்பான குறிப்பிடத்தக்க ஆபத்து உருவாகலாம் என்றும் எச்சரித்தார். மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ அமைப்புகளே உலகில் என்ன நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் நிலை உருவாகலாம் என்பதே அவரது கவலையாக உள்ளது.

மேலும், ஏஐ தொழில்நுட்பத்தில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தில் மனிதர்களின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இவை உறுதியான அறிவியல் கணிப்புகள் அல்ல என்றும், தனது தனிப்பட்ட மதிப்பீடுகளே என்றும் பால் கிறிஸ்டியானோ தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, அவர் குறிப்பிட்ட காலக்கெடுவை உறுதியான நிகழ்வாகக் கருத முடியாது.

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பு அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏஐ நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதுடன், அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து உலகளவில் வலுப்பெற்று வருகிறது. மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ இழக்கக்கூடும் என்ற இந்த எச்சரிக்கை, தொழில்நுட்ப உலகில் மீண்டும் முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author