சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாலோசனை அமைப்பு முறை கூட்டம்

சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாலோசனை அமைப்பு முறையின் முதல் வர்த்தக செயல் குழுக் கூட்டம் நவம்பர் 13ஆம் நாள் காணொளி மூலம் நடைபெற்றது.

இதில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சந்திப்பின் போது எட்டப்பட்ட கூட்டுக் கருத்துகளை வழிக்காட்டலாகக் கொண்டு, சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக கலந்தாலோசனை தீர்மானங்களை செயல்படுத்தும் வகையில், சுங்க வரி, 3000 கோடிக்கு 3000 கோடி என்ற பரஸ்பர சுங்கவரிக் குறைப்பு, வேளாண் பொருட்கள் வர்த்தகம் மற்றும் தத்தமது அக்கறை கொண்ட பிற கருப்பொருட்கள் பற்றி, இரு தரப்பும் ஆழமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.

இரு தரப்பும் வர்த்தக செயல் குழுவின் மூலம் பரிமாற்றத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி, ஒத்துழைப்புப் பட்டியலை இடைவிடாமல் அதிகரித்து, பிரச்சினைப் பட்டியலைக் குறைத்து, நியாயமான, சமமான சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வ நெடுநோக்கு நிதானமாக உறவை உருவாக்கப் பாடுபடும்.

Please follow and like us:

You May Also Like

More From Author