2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத பௌர்ணமி நிலவு, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வானில் தோன்ற உள்ளது. இதை ‘ஸ்னோ மூன்’ (Snow Moon) என்று அழைக்கிறார்கள்.
இது ஒரு ‘சூப்பர் மூன்’ கிடையாது என்றாலும், இந்த ஆண்டு தோன்றும் நிலவுகளில் இதுவே அதிக வெளிச்சம் கொண்டதாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நிலவின் ஒளியை பனிப்பொழிவு பிரதிபலிப்பதாலேயே இந்த அதீத வெளிச்சம் உண்டாகிறது. இந்த நிலவு பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:09 மணிக்கு அதன் முழுமையான ஒளியை அடையும்.
இந்திய நேரப்படி, பிப்ரவரி 2, திங்கட்கிழமை அதிகாலை 3:39 மணிக்கு நிலவு அதன் உச்சகட்டப் பிரகாசத்துடன் காணப்படும்.
பிப்ரவரி 1இல் தோன்றும் ஸ்னோ மூன்: சூப்பர் மூனை விட கூடுதல் வெளிச்சம்
