12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏபெக் மாநாட்டை சீனா நடத்துகிறது

12 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு சீனா மீண்டும் ஏபெக் உச்சி மாநாட்டை நடத்துகிறது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெள நிங் அம்மையார் 13ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டில் ஏபெக் “சீன ஆண்டு” என்ற நிகழ்வு பல சாதனைகளைப் படைத்துள்ளது. மற்ற ஏபெக் உறுப்பினர் பகுதிகளுடன் இணைந்து, “ஆசிய-பசிபிக் பொது சமூகத்தை உருவாக்குதல், கூட்டுச் செழுமையை ஊக்குவித்தல்”என்ற கருப்பொருள் குறித்தும், “வெளிப்படைத்தன்மை, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு” ஆகிய மூன்று முன்னுரிமைத் துறைகள் குறித்தும், சீனா 300க்கும் மேற்பட்ட ஏபெக் பற்றிய கூட்டங்களையும் நிகழ்வுகளையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 10ஆயிரத்துக்கும் மேலானோர் பங்கேற்று, தொடர்ச்சியான ஒத்துழைப்பு உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இது, ஷென்செனில் நடைபெற உள்ள ஏபெக் பொருளாதார தலைவர்கள் கூட்டத்துக்கு உறுதியான அடித்தளத்தையும் அமைத்துள்ளது என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author