மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆவணி மாத கார்த்திகையை ஒட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.