சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, மார்ச் 23ம் நாள், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தேசிய தினம் குறித்து, பாகிஸ்தான் துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமத் இஷாக் டாருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
வாங் யீ கூறுகையில், உலகளவில் வரலாறு கண்டிராத பெரும் மாற்றங்களை எதிர்கொண்டு, சீனாவும் பாகிஸ்தானும் மனம் ஒருமித்து இன்னல்களைக் கூட்டாகச் சமாளித்து, இரு தரப்பின் பொது நலன்களைப் பேணிக்காத்து வருகின்றன.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்தி, புதிய யுகத்தில் சீன-பாகிஸ்தான் பொது எதிர்கால சமூகக் கட்டுமானத்துக்குப் புதிய பங்கு ஆற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.