ரஷியாவின் மாஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 24ஆவது கூட்டம் குறித்து சர்வதேச சமூகம் ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது, உலக நிர்வாக முன்மொழிவை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி இவ்வமைப்பை மேலும் சீராகவும் வலிமையாகவும் வளர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். மேலும், தியென்ஜின் உச்சிமாநாட்டின் சாதனைகளைக் கையோடு கைக்கோர்த்து நடைமுறைப்படுத்தி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உலக நிர்வாகத்தில் மேலதிக பங்களிப்பை ஆற்றுவதை முன்னேற்ற வேண்டும் என இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகள் கருத்து தெரிவித்தன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 24ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய பிரதேச அமைப்பாக மாறியுள்ளது. இவ்வமைப்பானது உறுப்பு நாடுகளின் கூட்டு நன்மைகளைப் பேணிக்காப்பதோடு, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியையும் முன்னேற்றியுள்ளது.
இவ்வமைப்பின் சீரான வலிமையான வளர்ச்சி குறித்து சீனா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தனிச்சிறப்புமிக்கச் சாதகங்களைப் பயன்படுத்த வேண்டும், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டு முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும், புத்தாக்கம் மற்றும் மாற்றத்துக்கான உயிராற்றலை வெளிக்கொணர வேண்டும் என்னும் மூன்று முக்கிய முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளது.
