ஐபிஎல் 2026: ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! நுவன் துஷாராவிற்கு என்ஓசி மறுப்பு  

Estimated read time 0 min read

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளத் தயாராகி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஏற்கனவே சில முக்கிய வீரர்கள் விலகியுள்ள நிலையில், தற்போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷாரா உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்து கிரிட்டிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ள கடுமையான உடற்தகுதித் தேர்வில் நுவன் துஷாரா தோல்வியடைந்துள்ளார்.
மொத்தம் உள்ள 29 புள்ளிகளில் குறைந்தபட்சம் 17 புள்ளிகளைப் பெற வேண்டும் என்ற நிலையில், அவர் அந்த இலக்கை எட்டவில்லை.
இதன் விளைவாக, அவருக்கு ஐபிஎல் விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழை வழங்க இலங்கை வாரியம் மறுத்துவிட்டது.

You May Also Like

More From Author