தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று சீனாவுடனான வர்த்தகத்தின் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒரு முடிவை எட்டியுள்ளதாக அறிவித்தார்.
இந்தச் சந்திப்பு அற்புதமானதாக இருந்தது என்று விவரித்த டொனால்ட் டிரம்ப், சீனா மீதான வரிகளை 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பதாக அறிவித்தார்.
மேலும், முக்கியமான போதைப்பொருளான ஃபெண்டானில் மீதான வரியை 20% இலிருந்து 10% ஆகக் குறைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வந்த மற்றொரு முக்கியப் பிரச்சினை, அரிய கனிமங்கள் (rare earths) ஆகும்.
இதுகுறித்தும் ஒரு வருட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
சீனா மீதான வரிகளை 10 சதவீதம் குறைப்பாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
