கூட்டு ஏற்பாட்டிலுள்ள விலக்கு நடவடிக்கைகளின் 2 ஆண்டு நீட்டிப்புக்கு சீனா, கனடா ஒப்புதல்

சீனா, கனடா ஆகிய இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துகளின் கீழ், இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறும் எழுச்சியுடன் ஆரம்ப நிலை கூட்டு ஏற்பாட்டின் அடிப்படையில் பல சுற்று பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வை மேற்கொண்டு, கூடுதல் கூட்டு ஏற்பாட்டை உருவாக்கியுள்னன. ஆரம்ப நிலை கூட்டு ஏற்பாட்டிலுள்ள குறிப்பிட்ட விலக்கு நடவடிக்கைகள் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பதற்கு ஒப்பு கொண்டுள்ளன என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நவம்பர் 17ஆம் நாள் தெரிவித்தார்.

இதனிடையே, சீனாவின் எஃகு மற்றும் அலுமினிய தயாரிப்புகள் மீதான விலக்கு அளவை கனடா மேலும் விரிவாக்கும். இதற்கு இணையாக, கனடாவின் சில வேளாண் பொருட்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் மீதான பாகுபாடு எதிர்ப்பு நடவடிக்கைகளை சீனா மேலும் சரிப்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்த ஏற்பாடுகள் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கு துணைபுரியும் அதேவேளை, இருநாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளை கொண்டு வரும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author