ரஷிய அரசுத் தலைவர் புதின், சிறப்பு விமானம் மூலம், நவம்பர் 18ஆம் நாள் விடியற்காலையில், சீனாவின் குவாங்டோங் மாநிலத்தின் ஷென்சென் மாநகரை வந்தடைந்து, அவரது சீனப் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்.
33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதனிடையே, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நவம்பர் 19ஆம் நாளில், ரஷிய அரசுத் தலைவர் புதின், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் ஆகிய இருவருடன் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளார். இம்மூன்று நாடுகளின் அரசுத் தலைவர்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையை நடத்துவது வரலாற்றில் முதன்முறையாக விளங்கி, முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
