33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 19ஆம் நாள் முற்பகல், ஷென்செனில் நடைபெற்று வரும் 33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார்.

தன்னுடைய உரையில் அவர் கூறுகையில், நூறு ஆண்டுகாலத்தில் இல்லாத மாற்றங்கள் தற்போது வேகமாகவே ஏற்பட்டுள்ளன. அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் தொழில் துறையின் புத்தாக்கம் ஓங்கி வளர்ந்து வருகின்றன. புதிய வாய்ப்புகளையும் அறைகூவல்களையும் எதிர்நோக்கும் போது, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு, புதிய நிலைமைக்கு ஏற்ப, புதிய காலகட்டம் மற்றும் நிலைமையைப் படைக்க வேண்டும். அதோடு, பல தரப்புகளும் மனம் ஒருமித்து செயல்பட்டு, திறப்பு மற்றும் ஒருங்கிணைப்பை விரிவாக்கி, புத்தாக்கத்தை ஆழமாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேற்கொள்ளும் ஆசிய-பசிபிக் பொது சமூகக் கட்டுமானத்தை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு எனும் முன்மொழிவை விரைவுபடுத்துவதில் சீனா முன்னோடியாக விளங்குகிறது. அதோடு, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஆசிய-பசிபிக் பொது சமூகக் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கு முயற்சி செய்ய சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

இது குறித்து அவர் 4 முக்கிய ஆலோசனைகளையும்  வழங்கினார். முதலாவதாக பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். இரண்டாவதாக, ஒன்றுடன் ஒன்று தொடர்புகளை அதிகரிக்க வேண்டும். மூன்றாவதாக, சிறந்த புத்தாக்க சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நான்காவதாக, வளர்ச்சிக்கான அடிப்படையை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், ஏபெக் அமைப்பின் நடைமுறை ஒத்துழைப்புகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையில், 2 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியுதவியை சீனா வழங்கும் என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author