சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 14ஆம் நாள், சீன-இந்திய உறவு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்தியாவுடன் இணைந்து முயற்சி செய்து, இரு நாட்டுத் தலைவர்களின் பொதுக் கருத்துகளைச் சீராக நடைமுறைப்படுத்தி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பல தரப்பு மேடைகளின் மூலம் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, சீன-இந்திய உறவின் சீரான, நிதானமான வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்றார் அவர்.
இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி பயணியர் விமானச் சேவை பற்றி அவர் கூறுகையில், சீனா மற்றும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 280 கோடியைத் தாண்டியுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் நேரடி பயணியர் விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது என்பது, இரு தரப்புகளின் மனிதத் தொடர்பு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கு வசதிகளைக் கொண்டு வரும். இது குறித்து, சீனாவும் இந்தியாவும் நெருக்கமாகத் தொடர்புகொண்டு, வெகுவிரைவில் நேரடி பயணியர் விமானச் சேவையை மீண்டும் தொடங்குவதை முன்னேற்றி வருகின்றன என்றார் அவர்.not
இது தரப்புறவின் வளர்ச்சி குறித்து அவர் மேலும் கூறுகையில், சீனாவும் இந்தியாவும் பெரிய வளரும் நாடுகளாகவும், தெற்குலக நாடுகளில் முக்கிய உறுப்பு நாடுகளாகவும் திகழ்கின்றன. இந்நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை விரிவாக்கி, பொது நிலைமையைக் கருத்தில் கொண்டு சர்ச்சையைத் தீர்க்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்டவற்றின் மூலம் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு தரப்புறவின் சீரான, நிதானமான வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
