29ஆம் நாள் மாலை சீன வெளியுறவு அமைச்சகத்தின் தொடர்புடைய அதிகாரி சீனாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதரை வரவழைத்து உரையாடினார்.
அண்மையில் சீனத் தைவான் மற்றும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய பிலிப்பைன்ஸின் எதிர்மறை செயல்களைக் குறித்து சீனத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் நியாயமான உரிமைகளைப் பேணிக்காக்க மட்டுமல்லாமல், பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கான நடவடிக்கை இதுவாகும்.
கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் தொடர்பை மேற்கொண்டதோடு, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா முதலிய அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளுடனும் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்புகளையும் பிலிப்பைன்ஸ் அதிகரித்துள்ளது.
தென் சீனக் கடல் மற்றும் கடல்சார் நிகழ்ச்சி நிரலைக் கருவியாகக் கொண்டு பிராந்தியத்திற்கு வெளியே உள்ள நாடுகளின் உளவுத் தகவல், தூதாண்மை மற்றும் கருத்து ஆதரவைப் பயன்படுத்தி உரிமைப் பிரதேசம் மற்றும் கடல் எல்லைப் பகுதியிலுள்ள அதன் சட்டவிரோதமான கோரிக்கைகளை விரிவாக்கப் பிலிப்பைன்ஸ் முயன்றுள்ளது.
தென் சீனக் கடலின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காத்து பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தகராற்றைத் தீர்ப்பதில் சீனா எப்போதும் ஊன்றி நிற்கிறது. அத்துடன், தென் சீன கடலின் உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மை மற்றும் கடல்சார் உரிமைகளைப் பேணிக்காப்பதில் சீனாவின் மனவுறுதி மாறாது. அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் நெடுநோக்கைப் பின்பற்றி தைவான் நீரிணை பிரச்சினையில் விளிம்பில் விளையாடிய பிலிப்பைன்ஸ் தனக்தானே பெரிய தொல்லையை ஏற்படுத்திக்கொள்ளும். சீனாவின் எச்சரிக்கையின்படி, தீயுடன் விளையாடுபவர்கள் தங்களையே எரித்துக் கொள்வர்.