சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங்லியுவான் அம்மையார் பிப்ரவரி 5ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் கிர்கிஸ்தான் அரசுத் தலைவரின் மனைவி ஜபரோவாவுடன் தேனீர் விருந்தில் பங்கெடுத்தார்.
வசந்த விழா காலத்தில் கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவ் தம்பதி சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்து பொங்லியுவான் வரவேற்பு தெரிவித்தார். மகளிர், குழைந்தை மற்றும் நலிந்தோரின் உரிமைப் பாதுகாப்பு முதலிய துறைகளில் சீனாவும் கிர்கிஸ்தானும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி இரு நாட்டு மக்களுக்குக் கூட்டாக நன்மைகளைப் படைக்க எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சீனா ஈட்டியுள்ள மாபெரும் சாதனைகளை ஜபரோவா வெகுவாகப் பாராட்டினார். மானிடப் பண்பாட்டியல் முதலிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையே உள்ள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற அவர் விருப்பம் தெரிவித்தார்.