ஐரோப்பாவில் விமான எரிபொருள் தட்டுப்பாடு: 6 வாரங்களில் விமானங்கள் முடங்கும் அபாயம்  

Estimated read time 1 min read

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் காரணமாக, ஐரோப்பா மிகக்கடுமையான விமான எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளது.
ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எரிபொருள் கப்பல்கள் வராததே இந்த நெருக்கடிக்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது.
சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் ஃபாத்தி பய்ரோல் நேற்று அளித்துள்ள பேட்டியில், ஐரோப்பாவிடம் இன்னும் 6 வாரங்களுக்கு மட்டுமே விமான எரிபொருள் இருப்பு உள்ளதாக எச்சரித்துள்ளார்.
“ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் என்பது நாம் இதுவரை எதிர்கொண்டிராத மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author