சீன அரசவையின் ஹாங்காங் மற்றும் மகௌ விவகார பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் நவம்பர் 23ஆம் நாள் உரை நிகழ்த்துகையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 2026ஆம் ஆண்டு தேர்தல் கமிட்டியின் துணைப் பிரிவு சாதாரண தேர்தல் 22ஆம் நாள் தடையின்றி நடைபெற்றது என்றும், ஹாங்காங்கின் தேர்தல் அமைப்புமுறை மேம்படுத்தப்பட்ட பிறகு நடைபெற்ற 2ஆவது தேர்தலான இது, புதிய தேர்தல் அமைப்புமுறையின் முன்னேற்றத் தன்மை மற்றும் மேன்மையுடன், ஹாங்காங்கின் நிலவரத்துக்கு ஏற்ற உயர்தர ஜனநாயகத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
பரந்த அளவிலான பிரதிநிதித்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டம், சரிசமமான பங்கெடுப்புக்கான விதி அமைப்பு, சமத்துவமான போட்டித்தன்மை ஆகியவற்றை புதிய தேர்தல் அமைப்புமுறை கொண்டு, நற்பண்பு மற்றும் சிறந்த திறனுடையவர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதை நடப்பு தேர்தல் கமிட்டியின் தேர்தல் மீண்டும் மெய்ப்பித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
