காலநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் கட்டமைப்பு உடன்படிக்கையில் பங்கேற்ற தரப்புகளின் 31வது மாநாடு(COP31)22ஆம் நாள் நிறைவுப் பெற்றது. அரசியல் தீர்மானம் குறித்து இம்மாநாட்டில் ஒத்தக் கருத்துக்கள் எட்டப்படவில்லை. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் நவம்பர் 23ஆம் நாள் கூறுகையில், இதற்கு சீனா ஏமாற்றம் தெரிவிப்பதோடு, பலதரப்புச் செயல்முறையின் மீதான நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று கருதியதாக கூறினார்.
மேலும், பலதரப்புவாதத்தை உறுதியுடன் பேணிக்காத்து, சர்வதேச ஒத்துழைப்பை ஆக்கமுடன் செயல்படுத்தி, பசுமையான வளர்ச்சி முறை மாற்றத்தை முன்னேற்றி வருகின்ற சீனா, பொறுப்புணர்வு வாய்ந்த மனப்பாங்குடன் பல்வேறு தரப்புகளுடன் அறைக்கூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, உலகளாவிய கார்பன் குறைந்த மற்றும் பசுமையான வளர்ச்சி முறை மாற்றத்தையும் தொடரவல்ல வளர்ச்சி லட்சியத்தையும் கூட்டாக முன்னேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
