ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் ஒத்துழைப்பு சாதனைகள்

Estimated read time 1 min read

150க்கும் மேலான நாடுகள் மற்றும் சுமார் 30 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானம் தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் சீனா கையொப்பமிட்டுள்ளது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தைச் சேர்ந்த பிராந்திய திறப்புப் பிரிவின் தலைவர் லியாங் லின்சோங், 11ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி சேவை ஒட்டுமொத்த அளவில் பாதுகாப்பாகவும் தடையின்றியும் இயங்கி வருகிறது. இது வரை, இச்சேவையின் மூலம் மொத்தமாக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. இதன் வழியாக, 56 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள சரக்கு பொருட்கள் அனுப்பட்டன. ஐரோப்பாவின் 26 நாடுகளைச் சேர்ந்த 237 நகரங்களுக்கு இத்தொடர்வண்டிகள் சேவை வழங்கியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author