கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார்.
17 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில், பேப்பால் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அமெரிக்காவில் வாழும் தமிழர்களுடன் சிகாகோவில் ஒரு நிகழ்வில் முதல்வர் கலந்துரையாட உள்ளார்.
இது தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வணக்கம் அமெரிக்கா….. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக சிகாகோ நகரில் அமெரிக்க வாழ் தமிழர்களுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு செப்டம்பர் 7ஆம் தேதி (07.09.2024) நடைபெறவிருக்கிறது. அமெரிக்க வாழ் சொந்தங்களே சிகாகோவில் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.