சீனாவின் சியென் பின் சியௌ தீவின் பக்கத்தில் சட்டவிரோதமாக நின்று வருகிறது. பிலிப்பைன்ஸின் 9701ரக படகின் அருகில் ஆகஸ்ட் 3ஆம் நாள் முதல், பிலிப்பைன்ஸின் பல படகுகள் திரண்டுள்ளன.
இப்படகுகளை சீனாவின் கடல் காவல்துறை பின்தொடர்ந்து, பயனுள்ளதாகக் கட்டுப்படுத்தி வருவது சட்டப்பூர்வமானது. சியென் பின் சியௌ தீவு உள்ளிட்ட நான்ஷா தீவுக் கூட்டம் மற்றும் பக்கத்தில் கடல் நீர்ப்பரப்பு குறித்து மறுக்க முடியாத இறையாண்மையை சீனா கொண்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் படகின் இச்செயல், சீனாவின் உரிமை பிரதேசம் மற்றும் கடல் நலனுக்குப் புறம்பானது. தென் சீனக் கடல் பற்றிய பல தரப்பு செயல் அறிக்கையை இச்செயல் மீறியது. தென் சீனக் கடலின் அமைதி மற்றும் நிதானத்திற்கு இது தீங்கு விளைவிக்கும்.
சீனக் கடல் காவற்துறை எப்போதும் இப்பிரதேசத்தில் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, தேசிய உரிமை மற்றும் கடல் நலன்களை உறுதியாகப் பேணிக்காக்கும் என்று சீனக் கடல் காவற்துறையின் செய்தித்தொடர்பாளர் கான்யூ தெரிவித்தார்.