செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச வரையறைமயமாக்கப் பணி பற்றிய செய்தியாளர் கூட்டத்தை சந்தை ஒழுங்குமுறைக்கான சீனத் தேசிய நிர்வாகம் நவம்பர் 24ஆம் நாள் நடத்தியது. சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் இக்கூட்டத்தில் கூறுகையில், இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் செயற்கை நுண்ணறிவு பற்றிய மையத் தொழில்களின் அளவு 75 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டக்கூடும். அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் உற்பத்தித் தொழில் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படுவதுடன், தொடர்புடைய தரநிலை அமைப்புமுறையைச் சீனா தொடர்ச்சியாக மேம்படுத்தி, தொழில் நுட்பத்தின் புத்தாக்கச் சாதனைகளை, தொழில் துறை பயன்பாடுகளாக சிறப்பாக மாற்றுவதை முன்னேற்று வருகிறது என்றார்.
மேலும், தொழில் துறை சூழலியல் கட்டமைப்புத் துறையில், 6 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள தேசிய நிலை செயற்கை நுண்ணறிவு நிதியத்தை சீனா உருவாக்கியது. அத்துடன், செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கப் பயன்பாட்டுக்கான 18 தேசிய நிலை முன்னோடி மண்டலங்களின் கட்டுமானம் முன்னேற்றப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
