மக்கெள தாய்நாட்டிற்குத் திரும்பிய 25வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட மாநாடு மற்றும் மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசின் பதவி ஏற்பு விழா டிசம்பர் 20ஆம் நாள் நடைபெற்றன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், மக்கெள தாய்நாட்டிற்கு திரும்பிய கடந்த 25 ஆண்டுகளில், சீன அரசு மற்றும் உள் பிரதேசத்தின் பெரும் ஆதரவுடன் மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு ஒன்றுபட்டு சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் தொடர்ந்து வழிநடத்தி வருகின்றது.
மக்கெளவின் தனிச்சிறப்பு வாய்ந்த “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கை, பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இக்கொள்கையால், மக்கெளவில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு, சர்வதேசச் செல்வாக்கும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்றார்.