2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு ஆகஸ்ட் 31ஆம் நாள் தொடங்கி செப்டம்பர் முதல் நாள் வரை சீனாவின் தியென்ஜின் மாநகரில் நடைபெறவுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டைச் சீனா நடத்துவது இது 5ஆவது முறையாகும். அதோடு, இவ்வமைப்பு நிறுவப்பட்டது முதல் இதுவரையிலான மிகப் பெரிய உச்சிமாநாடும் இதுவாகும்.
சீன ஊடகக் குழுமம் வானொலி, தொலைக்காட்சி மற்றும் புதிய செய்தி ஊடகங்களை ஒன்றிணைந்து பன்மொழி பரப்புரையின் சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்தி சர்வதேச முன்னணித் தரத்துடன், இந்த உச்சிமாநாடு பற்றி செய்திகளை வெளியிடத் தயாராக உள்ளது.