இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா தனது பெயருக்கு ஏற்றபடி மேகங்களின் ஆலயமாக சிறப்பான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகின்றது.
மேகாலயாவின் தலைநகரம் ஷில்லாங் ஒரு இளைய தலைமுறையினரின் வாழ்விடம் போல எங்கு திரும்பினாலும் இளவயது மக்களின் புகழிடமாக விளங்குகின்றது.
இந்தியாவிலேயே அதிக மழை பெய்யும் சிரபுஞ்சியாகட்டும், ரப்பர் மரங்களின் வேரினாலேயே உருவான இயற்கைப் பாலமாகட்டும் (Natural Root Bridge) அழகான மலைத் தொடர்களாகட்டும் மேகாலயாவுக்கு இணையாக வேறு மாநிலம் கிடையாது.
2003-ம் ஆண்டு மேகாலயாவின் புகழ் திடீரென்று பிரபலமானது.
இந்த மாநிலத்தின் கிராமம், மாவ்லின்னாங் (Mawlynnong) ஆசியாவின் மிகத் தூய்மையான கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாவ்லின்னாங் கிராமம் ஷில்லாங்கிலிருந்து 90 கி.மீ தூரத்தில் தெற்கில் இருக்கின்றது.
இந்தியா – பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில் ஓடுகின்ற ஆற்றின் ஒரு கரையில் இந்தக் கிராமமும் மறுகரையில் பங்களாதேஷ் ஊர் ஒன்றும் அமைந்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் பொறியாளராகப் பணியாற்றும் எனது நண்பர் நாகராஜன் (Pramanayagam Nagarajan) வடகிழக்குப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்க அழைத்ததால் 2018-ம் ஆண்டு அவருடனேயே சென்னையிலிருந்து அஸ்ஸாம் – மேகாலயா – அருணாச்சல் மாநிலங்களைக் காண்பதற்கு பயணப்பட்டேன்.
பயணத்தில் மேகாலயாவுக்கு சென்றிருந்தபோது மாவ்லின்னாங் கிராமத்தைப் பார்க்க விரும்பி சிரபுஞ்சியைப் பார்த்த பின்னர் மாலையில் அந்த கிராமத்தைக் காணச் சென்றோம்.
மாவ்லின்னாங் கிராமத்திற்குள் நுழையும் இடத்திலேயே மிகப்பெரிய அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளார்கள்.
கிராமத்திற்குள் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் முற்றிலும் தடை.
புகை பிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது.
குப்பைகளைப் போட மூங்கிலால் ஆன வேலைப்பாடுகள் அமைந்த கூடைகள் ஆங்காங்கு அழகாக வைக்கப்பட்டுள்ளன. அதில்தான் குப்பைகளை கொட்ட வேண்டும்.
மழை நீர் வாய்க்கால்கள் சுத்தமாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தன.
கிராமத்தில் காசி இனப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். 100 சதவீதம் எழுத்தறிவு கொண்ட கிராமம்.
கிராமத்தின் தெருக்கள் மிகவும் சுத்தமாக இருந்தன.
சிறிய பெட்டிக் கடைகளும் தூய்மையாகக் காட்சியளித்தன.
எங்கு பார்த்தாலும் பல்வேறு நாட்டின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
இந்தியர்கள் தங்கள் நகரங்களை, ஊர்களை, பொது இடங்களை, வணங்கும் கோயில்களை, புனிதமாகக் கருதும் நதிகளை, பயணம் செய்யும் ரயில் வண்டிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தை எப்போதும் கடைப் பிடிக்காதவர்கள்!
ஆனால், அதற்கு எதிர்மறையாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு எளிய பழங்குடி இன மக்கள் தூய்மையை வாய்மைக்கு நிகராக கடைப்பிடிப்பது கண்டு வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது!
தூய்மை என்பது ஏதோ மேட்டுக்குடி மக்களின் ஏகபோகம் என்று நினைக்கின்ற மனப்பான்மை கொண்டோர் – மாவ்லின்னாங் பழங்குடி மக்களின் கிராமத்தையும் வாழ்வையும் நேர்த்தியையும் ஒற்றுமையையும் ஒருமுறை நேரில் பார்த்து விட்டால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.!
‘சுய-புரட்சியின் ஆற்றல்: சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய-ஆட்சிமுறையும் உலகிற்கு அதன் அர்த்தமும்’எனும் தலைப்பிலான உலகளாவிய உரையாடல் நிகழ்வு அண்மையில், லாவோஸ், [மேலும்…]
சீன வணிக அமைச்சகம் உள்ளிட்ட எட்டு அமைச்சகங்கள் 26ஆம் நாள் சேவை வர்த்தக வளர்ச்சிக்கான 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை வெளியிட்டு, புதிய இயக்காற்றலை [மேலும்…]
புதிய தலைமுறை தகவல் தொடர்பு வலையமைப்பின் கட்டுமானச் செயல்திட்டத்தை, சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சீன இணையவெளிப் பணியகம், தேசிய வளர்ச்சி [மேலும்…]
கஞ்சம் மாவட்டத்தில் கார்த்திகை பௌர்ணமி கொண்டாட்டத்தின்போது நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற ராமாயண நாடகத்தில், அனுமன் வேடமேற்று நடித்துக்கொண்டிருந்த 38 வயது நடிகர் மேடையிலேயே [மேலும்…]
ஜெனீவாவில் சீனாவுக்கான ஏற்றுமதித் திறன் மேம்பாட்டு அறிக்கை பற்றிய சர்வதேசக் கருத்தரங்கு நவம்பர் 25ஆம் நாள் முற்பகல் ஜெனீவாவில் நடைபெற்றது. சீனச் சர்வதேச வர்த்தகப் [மேலும்…]
6ஆவது சீன-ஜெர்மனி உயர் நிலைப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை, உள்ளூர் நேரப்படி நவம்பர் 24ஆம் நாள், ஜெர்மனியின் தலைநகர் பெர்லின்னில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]