சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ டிசம்பர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டகேஷி இவாயாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அப்போது வாங் யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜப்பான் அரசுத் தலைவர் இஷிபா ஷிகெரு ஆகிய இருவரும் பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் இருவரும் இரு நாடுகளின் எதிர்காலத் திசையை தெளிவுபடுத்தினர்.
சீனாவுடன் இணைந்து நெடுநோக்கு துறையில் ஒன்றுக்கு ஒன்று சலுகை உறவில் ஊன்றி நின்று, இரு நாட்டு உறவு வளர்ந்து வருவதை ஜப்பான் முன்னேற்ற வேண்டும் என்று சீனா விருப்பம் தெரிவித்தது.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், முதலாவது நெடுநோக்கு அறிவாற்றலை நிலைநிறுத்த வேண்டும். இரண்டாவது ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையைப் பேணிக்காக்க வேண்டும். மூன்றாவது தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தையை அதிகரிக்க வேண்டும்.
நான்காவது ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஐந்தாவது மனிதநேய பரிமாற்றங்களை வலுப்படுத்த வேண்டும். ஆறாவது முரண்பாடுகள் மற்றும் கருத்து வேற்றுமையை உரிய முறையில் கையாள வேண்டும் என்றார்.