வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு: சென்னை விலை நிலவரம்  

Estimated read time 0 min read

இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
அந்த வகையில் மார்ச் 2026 க்கான விலை மாற்றத்தை இன்று வெளியிட்டுள்ளன. இதன்படி, ஹோலி பண்டிகை நெருங்கும் வேளையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதமும் சிலிண்டர் விலை ரூ.50 வரை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author