டிசம்பர் 12ஆம் நாள் நண்பகல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் விமானம் மூலம் வியட்நாமின் தலைநகர் ஹனோயை சென்றடைந்து, அந்நாட்டில் அரசுமுறைப் பயணத்தை தொடக்கியுள்ளார்.
அப்போது ஷிச்சின்பிங் எழுத்து மூல உரையை நிகழ்த்திய போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், சகோதரரான வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம் அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த வணக்கம் மற்றும் அருமையான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அவர் சுட்டிக்காட்டுகையில், வியட்நாம் ஆசியாவின் முக்கிய நாடாகவும் ஆசியானின் முக்கிய உறுப்பு நாடாகவும் விளங்குகிறது. வியட்நாமுடனான உறவை சீனாவின் அண்டை தூதாண்மையுறவுகளில் முன்னுரிமை அளிக்கும் திசையாகச் சீனா கருதுகிறது. இப்பயணம் மூலம், வியட்நாம் தலைவருடன் சேர்ந்து இரு கட்சிகள் மற்றும் இரு நாட்டுறவின் பன்முகம், நெடுநோக்கு மற்றும் திசை ரீதியிலான பிரச்சினைகள் பற்றியும் பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் பற்றியும் கருத்துகளை ஆழமாகப் பரிமாறிக் கொள்ளவும், இரு நாட்டுறவைப் புதிய கட்டத்தில் முன்னெடுத்து செல்லவும் எதிர்பார்க்கிறேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.