முதலாவது லியாங்ச்சு மன்றக் கூட்டம் டிசம்பர் 3ஆம் நாள் ட்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
சீனத் தேசத்தின் 5000 ஆண்டுகால நாகரிக வரலாற்றின் உண்மையான ஆதாரமாகவும், உலக நாகரிகத்தின் செல்வமாகவும் லியாங்ச்சு வரலாற்று நினைவுச் சின்னம் விளங்குகிறது.
நீண்ட வரலாற்றில், சீனத் தேசத்தின் நாகரிகம், தனிச்சிறப்புடைய புத்தாக்கம் மற்றும் உறுதியுடன் பல சாதனைகளைப் படைத்துள்ளது. திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய சீனத் தேசத்தின் நாகரிகம், செழுமையாக வளர்ச்சி அடைந்து, உலகளவில் வேறுபட்ட நாகரிகங்களின் சாரம்சத்தைச் சேர்ப்பதோடு, உலக நாகரிகங்களையும் வளப்படுத்தி வருகிறது என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து, இணக்கத்துடன் கூட்டாகச் செயல்படுதல் என்பது, மனித நாகரிக வளர்ச்சிக்கு சரியான பாதையாகும். பல்வேறு தரப்புகள் லியாங்ச்சு மன்றக் கூட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கூட்டாளி நாடுகளுடன் நாகரிகப் பேச்சுவார்த்தையை வலுப்படுத்த வேண்டும்.
உலகளாவிய நாகரிக முன்னெடுப்பைச் செயல்படுத்தி, வேறுபட்ட நாகரிகங்களின் இசைவான சக வாழ்வை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.