சீனா சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 2030ஆம் ஆண்டுக்குள் சீன விண்வெளி வீரரை முதல்முறையாக சந்திரனுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக மே 29ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டப்படி, 2030ஆம் ஆண்டுக்குள் சீன விண்வெளி வீரர்கள் சந்திரனுக்கு சென்று சந்திரனில் அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்பப் பரிசோதனை ஆகியற்றை மேற்கொள்வார்கள். இந்த இலக்கை நிறைவேற்றுவதற்காக, புதிய தலைமுறை ஏவூர்தி, புதிய தலைமுறை விண்கலம், சந்திரனில் தரையிறங்கும் கருவி ஆகியவற்றின் ஆராய்ச்சிப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.