திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஹரி கிருஷ்ண பெருமாள் கோயிலில் ஹரி ஹரன் சந்திப்பு விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பொன்னேரியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஹரி கிருஷ்ணன் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் ஐந்தாம் நாளில் நாச்சியாரின் ஊஞ்சல் ஊர்வலமும், கருட வாகனத்தில் பெருமாள் வலம் வந்து ஹரியும் ஹரனும் சந்திக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.