சென்னையில் கடந்த சில வாரங்களாக நிலவிய விலை மாற்றத்திற்குப் பிறகு, இன்று (ஆகஸ்ட் 29) தங்கத்தின் விலை மீண்டும் தொடர்ந்து 4 நாட்களாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ. 9,470 ஆகவும், ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.75,760 ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளி விலையும் 1ரூபாய் உயர்வுடன் தொடர்கிறது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.131க்கும், ஒரு கிலோ ரூ.131,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பங்குசந்தை மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரங்கள் காரணமாக, தங்கம்-வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.