பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட தொடர் எச்சரிக்கைகளில் சமீபத்தியது காங்கிரஸ் MP சசி தரூர் விடுத்தது.
அவர், பயங்கரவாத செயல்களுக்கு இந்தியா ஒரு போதும் மறு கன்னத்தை திருப்பி காட்டாது என்றும், அதன் நிலத்தில் மேலும் நடத்தப்படும் எந்த தாக்குதலுக்கும் இந்தியா “பதிலளிக்கும்” என்றும் உறுதிப்படக்கூறினார்.
பனாமாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அனைத்துக் கட்சிக் குழுவில் ஒன்றிற்குத் தலைமை தாங்கும் சசி தரூர் உரையாற்றினார்.
பயமின்றி வாழ்வது பற்றிய மகாத்மா காந்தியின் போதனைகளை அவர் எடுத்துரைத்தார்.
மேலும் ஒருவர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்றும் கூறினார்.e
பாகிஸ்தானிற்கு சஷி தரூர் எச்சரிக்கை
