திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவைக் காண குவிந்த பக்திப் பாடல்கள் பாடினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, தீபம் ஏற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக, பழனி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் சாலையின் முன்பகுதியில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் அமர்ந்து, முருகப் பெருமானின் பக்திப் பாடல்களைப் பாடியும், பக்தி முழக்கங்களை எழுப்பியும் உற்சாகத்துடன் தீபத் திருவிழாவைக் காணக் காத்திருக்கின்றனர்.
மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட உள்ளதை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முழுவதும் பக்தி பரவசத்துடன் காணப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் அந்தத் தருணத்தைக் காண பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதால் அப்பகுதியில் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
