தமிழக வேளாண் பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள்!

Estimated read time 1 min read

தமிழகத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டப் பேரவையில் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் 15-ம் தேதி வரை பேரவை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில், 13-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14–ம் தேதியும் விவாதம் நடைபெற்றது. 15–ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றினார்.

இந்த நிலையில், தமிழத்தின் 2024-2025 நிதியாண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 19 -ம் தேதியான நேற்று தாக்கல் செய்தர்

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 20 -ம் தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாயப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில், பஞ்சகவ்யம், மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள குழுக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சீரகச் சம்பா போன்ற பாரம்பரிய நெல் வகைகள் 1,000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்ய வழங்கப்படும் என்றும் பாரம்பரிய உணவு வகைகள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய, பெரிய நாற்றங்கால் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும் என்றும், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களைப் பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வாழை , பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்க ஊக்குவிக்கப்படும் என்றும், அனைத்து பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில் 4,75,000 பரப்பில் அதிகரிக்க ரூ.40.27 கோடி மத்திய மானிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author